வெற்றிக் கொண்டாட்டமும் கிடையாது! வெற்றி ஊர்வலம் கிடையாது!

தேர்தல் வாக்கு எண்ணப்படும் தினத்தன்று வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்!
 
வெற்றிக் கொண்டாட்டமும் கிடையாது! வெற்றி ஊர்வலம் கிடையாது!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது ஏப்ரல் 6-ஆம் தேதி பாதுகாப்பான முறையில் நடைபெற்றது.தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும், வாக்காளர்கள் அனைவரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையாற்றினார். அவர்களைப் பாதுகாப்பும் வண்ணமாக அவர்களுக்கு முகக்கவசம் கையுறை  வழங்கப்பட்டன.  தமிழகத்தில் காலை 7 மணி தொடங்கி இரவு 7 மணி வரை 12 மணி நேரமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு மத்தியில் கவனமாக பாதுகாக்கப்படுகிறது.election

தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ, அவர் சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையானது முன்னர் அறிவித்திருந்த தேதிப்படி மே இரண்டாம் தேதி எண்ணப்படும் என்றும் கூறியிருந்தார். ஆயினும் பல கட்டுப்பாட்டு விதிகளுடன் கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றி வாக்கு எண்ணப்படும் என்றும் கூறினார்.

இந்நிலையில் தற்போது இந்திய தேர்தல் ஆணையம் ஆனது சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி வாக்கு எண்ணப்படும் தினத்தன்று வெற்றியாளர்கள் கொண்டாடுவதற்கு அனுமதி மறுத்துள்ளது. மேலும் வெற்றி பெற்ற வெற்றியாளர்கள் வெற்றி ஊர்வலம் மேற்கொள்வதைத் தடை விதித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.தமிழகத்தில் மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணபட்டாலும் வேட்பாளர்கள் அனைவரும் அமைதியுடன் வெற்றியைக் கொண்டாடுவது என்பதும் தெரியவந்துள்ளது.

From around the web