ஆன்லைனில் மது விற்பனை என்பது இல்லவே இல்லை!!!

தமிழகத்தில் மது விற்பனையானது ஆன்லைனில் விற்கப்படவில்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்
 
liquor

தற்போது நம் தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பாக படிப்படியாக ஊரடங்கு குறைக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் தொடர்ச்சியாக வர்த்தகக் கடைகள் தொழிற்சாலைகள் போன்றவைகள் கட்டுப்பாடான சூழ்நிலையில் திறக்கப்பட்டன. இந்த சூழலில் தமிழகத்திற்கு அதிக வருமானம் தரும் தொழில்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது மதுபானம்.senthil balaji

இது தமிழகத்தில் மிகவும் வேதனையாக காணப்படுகிறது.  இந்த மதுவினால் பல குடும்பத்தில் சண்டைகள் அதிகமாக காணப்படுகிறது. இதற்கு மத்தியில் சில தினங்களாக ஆன்லைனில் மது விற்பனையானது ஆங்காங்கே நடைபெற்றது. மேலும் அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதுகுறித்து தற்போது தமிழகத்தின் சட்டபேரவையில் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

அதன்படி தமிழகத்தில் ஆன்லைனில் மது விற்பனை என்பது இல்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவர் எந்த நிலையிலும் கூட ஆன்லைனில் மது விற்பனை என்பது நம் தமிழகத்தில் இருக்காது  என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். மேலும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு கூடுதலாக 500 தொகுப்பு ஊதியம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதனையும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.அதன்படி டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூபாய் 500 தொகுப்பு ஊதியம் கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

From around the web