தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை;முதல்வரின் கருத்து அருவருப்பாக உள்ளது ப.சிதம்பரம்!

உத்தரபிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்று யோகி ஆதித்யநாத் கருத்து அருவருப்பாக உள்ளதாக சிதம்பரம் கூறியுள்ளார்
 
தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை;முதல்வரின் கருத்து அருவருப்பாக உள்ளது ப.சிதம்பரம்!

தற்போது நாடெங்கும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடுகள் அதிகமாக காணப்படுகிறது. மேலும் தடுப்பூசி மட்டுமின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது தேவைப்படும்  ஆக்சிஜன் தட்டுப்பாடும் தற்போது நாடெங்கும் அதிகரித்து உள்ளது. மேலும் ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் இதுகுறித்து உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பல மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை வைத்திருந்தார் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பலரும் அவருக்கு எதிராக அதிர்வலைகள் கூறி இருந்தனர்.yogi adhithyanath

மேலும் நேற்றைய தினம் நடிகர் சித்தார்த்தும் தனது பங்கிற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு எதிராக பதில் கூறும் வண்ணமாக ட்விட் செய்து இருந்தார். மேலும் இந்நிலையில் தற்போது ப.சிதம்பரம் அவரது கருத்துக்கு பதில் கூறுகிறார். அந்த படி உத்திரப்பிரதேசத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்ற அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து அருவருப்பாக  உள்ளது எனக் கூறியுள்ளார். மேலும்ஆக்சிசன் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதும் அருவருப்பை தருகிறது என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மேலும் ஆக்சிசன் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து தொலைக்காட்சிகள் போலியான காட்சிகளை ஒளிபரப்புகின்றன என்று கேள்வி எழுப்பினார். மேலும் இந்திய மக்களை முட்டாளாக கருதும் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்றும் மக்களை அழைப்பு விடுத்துள்ளார். மேலும் நோயாளிகளின் குடும்பத்தினர் பொய் சொல்கின்றனரா? இதுகுறித்து வெளியான வீடியோக்கள் படங்கள் போலியானதா? என கேள்வி எழுப்பி உள்ளார் சிதம்பரம். நாளிதழ்கள் தவறான செய்திகளை வெளியிடுகிறார்களா? அனைத்து மருத்துவர்களும் பொய் சொல்கிறார்களா? எனவும் கேள்வி எழுப்பினார்.

From around the web