வாக்கு எண்ணிக்கை தள்ளி வைக்கும் திட்டம் இல்லை; சொன்ன நாளில் நடைபெறும்!

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்கும் திட்டம் இல்லை என்று கூறுகிறார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு!
 
வாக்கு எண்ணிக்கை தள்ளி வைக்கும் திட்டம் இல்லை; சொன்ன நாளில் நடைபெறும்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது.மேலும் இந்த தேர்தலில் மிகவும் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் வாக்காளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களுக்கு முகக்கவசம் கையுறை போன்றவைகள் வழங்கப்பட்டன. மேலும் அவர்களின் உடல் வெப்ப நிலையும் பரிசோதிக்கப்பட்டு அதன் பின்னர்அவர்களை வாக்களிக்க அனுமதித்தனர் அதிகாரிகள். தமிழகத்தில் வாக்கு பதிவானது 12 மணி நேரங்களாக நடைபெற்றது.saagu

தமிழகத்தில்   தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு உள்ளார். மேலும் அவர் தேர்தலின் போது பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளையும் சில தகவல்களையும் வெளியிட்டு வந்தார்.மேலும் அதன்படி தமிழகத்தில் முன்னர்  தேதிப்படி மே இரண்டாம் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அவர் கூறியிருந்தார். ஆயினும் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி வாக்குப்பதிவு எண்ணப்படும் என்றும் அவர் திட்டவட்டமாக கூறி இருந்தார்.இந்நிலையில் தற்போது அவர் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஜூன் ஆகஸ்ட் மாதத்துக்கு வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைப்பது குறித்த ஆலோசிக்கவில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளோம் என்று ஐகோர்ட்டில் விளக்கம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மே 2-ஆம் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். இதனால் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தள்ளிப்போகாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web