மேற்கு பகுதியில் பெரும்பான்மை இல்லை! "குறிவைக்கும் மு க ஸ்டாலின்" மக்கள் மனதில் இடம் கிடைக்குமா?

எனக்கு வரவேற்பு பதாகைகள் வைப்பது விட்டு பசியை போக்கும் உன்னத பணியில் ஈடுபட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திமுக கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளார்!
 
kongu nadu

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நிகழ்கிறது. மேலும் பல வருடங்களுக்கு பின்னர் திமுக அபார வெற்றி பெற்று தமிழகத்தில் 10 ஆண்டுக்கு பின்னர் ஆட்சியில் அமைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் தற்போது புதிய முதல்வராக அமர்ந்துள்ளார் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான மு க ஸ்டாலின். மேலும் அவர் தேர்தல் சமயத்தில்  வாக்குறுதிகளையும் தற்போது ஒன்று ஒன்றாக நிறைவேற்றி வைக்கிறார். இதனால் மக்கள் மனதில் நல்லதொரு இடத்தினை தமிழக முதல்வராக உள்ள மு க ஸ்டாலின் தக்க வைத்து வருகிறார் என்பதும் கூறலாம்.stalin

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் 3 வார காலத்திற்கு ஊரடங்கு நடைமுறையில் உள்ளன. மேலும் நான்காவது வாரம் ஆன அடுத்த வாரம் முன் தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது கட்சியான திமுகவின் தொண்டர்களுக்கு சில வேண்டுகோளை விடுத்துள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் ஒருவர்கூட பசியால் வாடவில்லை என்கின்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தமிழக அளவிலும் அதுவும் குறிப்பாக கோவை ஈரோடு திருப்பூரில் உணவு வழங்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் கடந்த ஒருவார ஊரடங்கு காரணமாக கொரோனா வெகுவாக குறைந்துள்ளது என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின். மேலும் கோவை வருகையின்போது வரவேற்பு களை தவிர்க்க வேண்டுகோள் விடுத்துள்ளார் நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின். மேலும் எனக்கு வரவேற்பு பதாகைகள் வைப்பது விட்டு பசியைப் போக்கும் உன்னத பணியில் ஈடுபட வேண்டும் என்று தனது கட்சியின் உறுப்பினர்களுக்கு முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு இன்றி இந்த கொரோனா நோய் தொடர் சங்கிலியை துண்டித்து விட முடியாது என்று அவர் கூறியுள்ளார். மேலும் கோவை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த கொரோனா நோயின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது கவலை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

From around the web