இனிமேல் பஞ்சு மற்றும் கழிவு பஞ்சுக்கு நுழைவு வரி கிடையாது!!

பஞ்சி கழிவுப் பஞ்சு மீதான ஒரு சதவீதம் நுழைவு வரி ரத்து செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்
 
cotton

தற்போது நான் தமிழகத்தில் அதிகமாக மேற்கத்திய கலாச்சாரம் அதிகமாக காணப்படுகிறது. அதுவும் நம் உடைகளில் கூட தற்போது நவீனமாக காணப்படுகிறது. இதனால் நெசவாளர்களின் தொழில் மிகவும் பாதிப்படைகிறது.  இந்த நிலையில் தற்போது கதர் ஆடைகளின் உற்பத்தியும் தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கிவிட்டது. மேலும் பல இடங்களில் கதர் ஆடைகள் விருப்பம் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சில முக்கிய அறிவிப்புகளை கூறியுள்ளார்.stalin

அதன்படி இனிமேல் பஞ்சிக்கும் நுழைவு வரி கிடையாது ரத்து செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அதன்படி பஞ்சு மீதான ஒரு சதவீத நுழைவு வரி ரத்து செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். தமிழ்நாடு நெசவாளர்களுக்கு தேவையான 95% பஞ்சு வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது என்றும் கூறியுள்ளார். இதுவரை வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பஞ்சுக்கு ஒரு சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்தது.

நுழைவு வரி என்பது பருத்தி கொள்முதல்  மட்டுமே விதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மாறாக பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு ஆகிய உற்பத்தி பொருள்கள் மீது வரி விதிக்கப்படுகிறது என்று கூறினார். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து பஞ்சு கொள்முதல் செய்யும் போது சிறு குறு நெசவாளர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது என்றும் அவர் கூறினார். இதனால் அந்த ஒரு சதவீதம் கூட இனிமேல் பஞ்சு மற்றும் கல்வி பஞ்சம் இருக்காது என்றும் ரத்து செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

From around the web