திருமணத்துக்காக இ பாஸ் கிடையாது! இறப்புக்காக இ பாஸ் உண்டு!

தமிழகத்தில் இப்பதிவு நடைமுறையில் திருமணத்துக்கான அனுமதி நீக்கப்பட்டுள்ளது!
 
e pass

தற்போது தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. காரணம் என்னவெனில் தற்போது நாடெங்கும் கொரோனாவின் வீரியம் அதிகமாக உள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இந்த நோயினை கட்டுப்படுத்த ஊரடங்கு பயன்படுத்துகின்றனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் இந்த நோயின் தாக்கம் குறையும் இந்நிலையில் நம் தமிழகத்திலும் இந்த ஊரடங்கு இரண்டு வார காலத்திற்கு நடைமுறையில் உள்ளன. ஆயினும் நம் தமிழகத்தில் இந்த கொரோனா தாக்கமானது குறையவில்லை என்றே கூறலாம்.e pass

இதனால் நம் தமிழக அரசானது மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது, அதனை நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் மே 24ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளது என்றும் கூறியுள்ளார். பலரும் வெளியூருக்கு செல்ல முடியாமல் உள்ளது ,காரணம் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலர் இ பாஸ் செய்து வெளியூருக்கு செல்கின்றனர்.

 ஆனால் பலரும் இதில் திருமணம் என்ற பகுதியினை தவறாக பயன்படுத்தி வெளியே செல்கின்றனர். இதனால் அவர்கள் மிகவும் பாதிப்பினை உருவாகின்றனர் இந்நிலையில் தற்போது தமிழக அரசின் சார்பில் சில உத்தரவு வெளியாகியுள்ளது .அதன்படி தமிழக அரசின் இ பாஸ் நடைமுறையில் தற்போது திருமணத்துக்கான அனுமதி நீக்கப்பட்டுள்ளது, அதைத்தொடர்ந்து இறப்புக்காக மட்டும் இ பாஸ் உடன் பயணிக்க அனுமதி அளித்துள்ளது. மேலும் உரிய மருந்து காரணங்கள் மருத்துவ காரணங்கள் இழப்புகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பதிவு அனுமதி அளித்துள்ளது. நம் தமிழக அரசு மேலும் மருத்துவ காரணங்களுக்காக மாவட்டங்களுக்குள் பயணிக்க இப்பதிவு தேவையில்லை என்றும் அரசு கூறியுள்ளது.

From around the web