"இனி தமிழகத்தில் 11ஆம் வகுப்பு நுழைவுத்தேர்வு கிடையாது"-பள்ளிக்கல்வித்துறை!

தமிழகத்தில் பதினோராம் வகுப்பு நுழைவு தேர்வை ரத்து செய்யப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
 
DPI

தற்போது நம் தமிழகத்தில் சில தினங்களாக அதிகமாகப் பேசப்பட்ட வார்த்தை என்னவென்றால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது? என்று கூறலாம். அதன்படி தமிழகத்தில் உள்ள பல பகுதிகளிலும் தினந்தோறும் கேட்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் புதிதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி இடமும் தினந்தோறும் இந்த கேள்வி கேட்கப்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இதனால் 12 மாணவர்கள் இனி காத்திருக்க வேண்டியதில்லை என்றும் தெளிவாக தெரிந்தது.dpi

 தற்போது மேலும் ஒரு இன்பமான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தில் பதினோராம் வகுப்பு காண நுழைவுத்தேர்வு தற்போது ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கொள்குறி முறையில் பதினோராம் வகுப்பு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் தற்போது இதனை ரத்து செய்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. மேலும் ஒரே பிரிவில் கூடுதலாக மாணவர்கள் சேர விரும்பினால் நுழைவுத் தேர்வு நடத்த முன்பு கூறப்பட்டது.

மேலும் தற்போது ஒன்பதாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு பதினோராம் வகுப்பில் பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம் என்றும் கூறியுள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் நுழைவுத் தேர்வு எதுவும் நடத்த தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் விருப்பத்தின்படி பிரிவுகளை ஒதுக்க அறிவுறுத்தியுள்ளது பள்ளிக்கல்வித்துறை.

From around the web