சசிகலா-திமுக இடையே உடன்பாடு இருக்கிறது: அமைச்சர் ஜெயகுமார்

 

சசிகலா-திமுக இடையே ரகசிய உடன்பாடு இருக்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் திடீரென குற்றஞ்சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று சென்னை வரவிருப்பதை அடுத்து அதிமுக வட்டாரம் பெரும் பரப்பில் உள்ளது. இந்த நிலையில் சசிகலா குறித்து ஜெயக்குமார் இன்று பேட்டி அளித்தபோது ’சசிகலாவை அதிமுகவில் சேர்க்கவோ அல்லது அதிமுக மற்றும் அமமுக இணைக்கவோ 100% வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

sasikala

மேலும் சசிகலாவுக்கு அதிமுக கொடியை பயன்படுத்துவதற்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்று அவர் கூறினார். அதுமட்டுமின்றி சசிகலா மற்றும் திமுக இடையே ரகசிய உடன்பாடு இருக்கிறது என்றும் அதிமுகவை வீழ்த்துவதற்காக அவர் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து உள்ளார் என்றும் ஆனால் அவர் நினைப்பது நடக்காது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சசிகலா குறித்து திமுக எந்தவித விமர்சனமும் செய்யாமல் இருக்கும் நிலையில் சசிகலா மற்றும் திமுக இடையே உடன்பாடு என அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web