பெரிய மரம் வேரோடு சாய்ந்தது; நூலிழையில் உயிர் தப்பிய இளம்பெண்!

மும்பையில் கனமழை காரணமாக சாலையில் இருந்த மரம் வேரோடு சாய்ந்ததில் பெண்ணொருவர் நல்லவிதமாக உயிர் தப்பியதாக கூறப்படுகிறது!
 
பெரிய மரம் வேரோடு சாய்ந்தது; நூலிழையில் உயிர் தப்பிய இளம்பெண்!

தற்போது இந்தியா முழுவதும் கோடை காலமே நிகழ்கிறது.ஆனால் இந்தியாவின் பல பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது காரணம் என்னவெனில் காலநிலை மாற்றமும் இதனை முக்கிய ஒரு காரணமாக கூறலாம். மேலும் அரபிக்கடலில் சில தினங்களாக ஆட்கொண்டு உள்ள டவ் தே என்ற புயலின் காரணமாக இந்தியாவிலுள்ள கடலோர மாநிலங்கள் பலவற்றிலும் பெரும்பாலும் கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் இந்த டவ் தே புயலின் காரணமாக கன மழை பெய்து அங்குள்ள சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் புரண்டு ஓடின.rain

மேலும் இந்தியாவில் இந்த டவ் தே புயலின் தாக்கம் மும்பை மாநகரில் அதிகமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மும்பையில் உள்ள கடலானது மிகுந்த சீற்றத்தோடு பாலத்தை கடந்து காணப்பட்டன. மேலும் மும்பையின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது. மேலும் பல பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் இந்த கொரோனா காலகட்டத்திலும் இத்தகைய இன்னலுக்கு ஆளாகி நிலையில் தற்போது ஒரு சிசிடிவி காட்சி இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

அதன்படி மும்பையில் கனமழை பெய்த காரணத்தால் சாலையோரம் இருந்த ஒரு பெரிய மரம் வேரோடு பிடுங்கி சாய்ந்தது. மேலும் அந்த சாலையில் நடந்து கொண்டிருந்த பெண் ஒருவர் நொடிப்பொழுதில் உயிர் தப்பியதாக காணப்படுகிறது. மேலும் அந்தப் பெண் மழையின் காரணத்தால் குடை பிடித்து நடந்து கொண்டிருந்தார். திடீரென அந்த பகுதியில் உள்ள பெரிய மரம் வேரோடு பிடுங்கி அதில் அவர் அதனை கண்டு அச்சத்தில் ஓடியதில் நல்லவிதமாக உயிர் தப்பியதாக காணப்படுகிறது.

From around the web