பிறந்த அடுத்த நொடியே பெண் குழந்தை செய்த வேலை: வைரலாகும் புகைப்படம்

 

பிறந்த அடுத்த நொடியே குழந்தை மருத்துவரின் மாஸ்க்கை விலக்க முயற்சித்த புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது 

துபாயைச் சேர்ந்த மகளிர் சிறப்பு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்தது இந்த குழந்தைக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் மாஸ்க் அணிந்த நிலையில் அந்த குழந்தை பிறந்த உடனே அந்த மருத்துவரின் மாஸ்க்கை எடுக்க முயற்சித்து அவருடைய முகத்தின் மீது கை வைத்தது 

இதுகுறித்த புகைப்படத்தை அந்த மருத்துவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். நாம் எல்லோரும் மாஸ்கு அணிவதில் இருந்து விரைவில் விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது என்ற சிக்னலை குழந்தைகள் காட்டி இருப்பதாகவும் இந்த உலகம் மிக விரைவில் கொரோனா வைரஸில் இருந்து மீண்டு விடும் என்று தான் நம்புவதாகவும் இந்த புகைப்படத்தில் அந்த மருத்துவர் பதிவு செய்துள்ளார் 

இந்த புகைப்படம் ஒரு சில மணி நேரங்கள் மில்லியன் கணக்கானோர் லைக் செய்துள்ளனர் என்பதும், பலரையும் இந்த புகைப்படம் கவர்ந்து அனைவரின் மனதிலும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web