கிரண்பேடியை சந்தித்து கண்ணீர் விட்டு அழுத பெண் எஸ்.பி

புதுவை மாநில துணை ஆளுநராக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து கொண்டிருந்த கிரண்பேடி சமீபத்தில் திடீரென நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தெலங்கானா மாநில ஆளுநராக பதவி வகித்து வரும் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் புதுவை மாநில துணை ஆளுநராகவும் கூடுதலாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பதவி நீக்கப்பட்ட புதுவை மாநில முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை புதுவை பெண் எஸ்பி ஒருவர் நேரில் சந்தித்து கண்ணீர் விட்டு கதறிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடியை அவரது தீவிர ஆதரவாளர் என்று கூறப்படும் பெண் எஸ்பி ரட்சனா சிங் என்பவர் நேரில் சந்தித்தார். ஆளுநர் மாளிகையை விட்டு கிரண்பேடியை செல்லும்போதுஅவர் கண்ணீர் விட்டு அழுத புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது
தனக்காக ஒரு எஸ்பி கண்ணீர் விட்டு அழுதது அறிந்து ந்எகழ்ச்சி அடைந்த கிரன்பேடி அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது