நடைமுறைக்கு வந்தது வார இறுதி ஊரடங்கு!எந்தெந்த மாநிலத்தில்?

கர்நாடகம் கேரளா ஒரிசா மாநிலத்தில் வார இறுதி ஊரடங்கு நடைமுறையில் வந்தது!
 
நடைமுறைக்கு வந்தது வார இறுதி ஊரடங்கு!எந்தெந்த மாநிலத்தில்?

மக்கள் மத்தியில் தற்போது மிகவும் அச்சத்தை கொண்டு காணப்பட்டு கண்ணுக்கே தெரியாமல் வளர்ந்து வருகிறது கொரோனா நோய். கொரோனா நோய்க்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் பல்வேறு உத்தரவுகளை கட்டுப்பாட்டு விதிகளை விதித்துள்ளனர். மேலும் பல நாடுகளிலும் நோய் தாக்கம் அதிகரித்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் சில வாரங்களாக தான் இந்தியாவில் இந்த நோய் இரண்டாவது அலையாக அதிகரித்துள்ளது. மேலும்மத்திய அரசின் சார்பில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகள் அனுப்பப்படுகின்றன.lockdown

மேலும் ஒரு சில மாநிலங்களில் இரவு நேரமும் ஒரு சில மாநிலங்களில் ஒரு வார காலம் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளன. தமிழகத்திலும் சில தினங்கள் முன்பாக இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் பட்டன. இந்நிலையில்தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு நேர ஊரடங்கு அமல் படுத்தப் உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி நாளைய தினம் தமிழகத்தில்முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளன. இதனை தொடர்ந்து தற்போது பல மாநிலங்களில் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன.

அதனை தொடர்ந்து கர்நாடகம் கேரளா ஒடிஷா மாநிலத்தில் தற்போது வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கர்நாடகத்தில் பல பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் கர்நாடகத்தில் கடைகள் வணிக நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளதால் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் பயணிகள் அதிகம் வராததால் காலியான பேருந்துகளில் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் காலையில் புதுச்சேரியில் 55 மணி நேரம் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web