தமிழக- கேரள எல்லையில் நடுரோட்டில் நடந்த திருமணம்!!

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்குப்பொருட்டு, இந்தியாவில் மார்ச் 24 முதல் ஜூன் 30 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்குள் செல்லவே ஈ-பாஸ் முறைகள் அமலில் உள்ள நிலையில் ஒரு மாநிலத்தில் மற்றொரு மாநிலத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக உள்ளன. இந்த நிலையில் கேரள-தமிழக எல்லையில் நடுரோட்டில் ஒரு திருமணம் நடைபெற்று புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. கேரளாவின் சின்னாரில் உள்ள பிரியங்காவிற்கும், தமிழ்நாட்டில்
 
தமிழக- கேரள எல்லையில் நடுரோட்டில் நடந்த திருமணம்!!

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்குப்பொருட்டு, இந்தியாவில் மார்ச் 24 முதல் ஜூன் 30 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்குள் செல்லவே ஈ-பாஸ் முறைகள் அமலில் உள்ள நிலையில் ஒரு மாநிலத்தில் மற்றொரு மாநிலத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிலும் தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக உள்ளன. இந்த நிலையில் கேரள-தமிழக எல்லையில் நடுரோட்டில் ஒரு திருமணம் நடைபெற்று புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தமிழக- கேரள எல்லையில் நடுரோட்டில் நடந்த திருமணம்!!

கேரளாவின் சின்னாரில் உள்ள பிரியங்காவிற்கும், தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தைச் சார்ந்த ராபின்சனுக்கும் மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றதை அடுத்து, திருமணம் மே மாதம் நடத்த பத்திரிக்கைகள் அடித்தனர்.

கொரோனா ஊரடங்கினால் மண்டபத்தில் நடத்த முடியாததால், ராபின்சன் வீட்டில் நடத்த முடிவு செய்து ஏற்பாடுகளைத் துவக்கிய நிலையில், மணமகளைத் தவிர மற்றவர்களுக்கு இ-பாஸ் கிடைக்கவில்லை.

இதனால் தமிழக-கேரள எல்லையில் நடு ரோட்டில் திருமணம் நடத்தப்பட்டது. நடு ரோட்டில் நடந்த இந்த திருமணத்தினை அங்கிருந்தவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர். ஏற்கனவே கிடைத்த ஈ-பாஸின்படி மணமகள் மணமகன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் நடுரோட்டில் நடந்த இந்த திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

From around the web