இன்று மாலையுடன் முடிவடையும் வேலூர் பிரச்சாரம்

வேலூர் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்தும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். ஏ.சி. சண்முகத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கதிர் ஆனந்துக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வேலூர் மண்டி தெருவில் இன்று நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார்.
 

வேலூர் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்தும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஏ.சி. சண்முகத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 

இன்று மாலையுடன் முடிவடையும் வேலூர் பிரச்சாரம்


கதிர் ஆனந்துக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வேலூர் மண்டி தெருவில் இன்று நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார். கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். 

இன்று மாலை 6 மணியில் இருந்து வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான கூட்டமோ, ஊர்வலமோ நடத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

நேற்று வேலூரின் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் புதிய நீதிக் கட்சியின் தலைவரும், அதிமுக வேட்பாளருமான ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

இன்று பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில், பரபரப்பாக அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரித்து வருகின்றன.


From around the web