பிரதமர் நாளொன்றுக்கு 18 முதல் 19 மணிநேரம் வேலை செய்வதாக கூறும் மத்திய அமைச்சர்!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக பாரத பிரதமர் நரேந்திரமோடி நாளொன்றுக்கு 18 முதல் 19 மணிநேரம் பணியாற்றுகிறார் என்று கூறுகிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!
 
பிரதமர் நாளொன்றுக்கு 18 முதல் 19 மணிநேரம் வேலை செய்வதாக கூறும் மத்திய அமைச்சர்!

மக்கள் மத்தியில் தற்போது உயிர்க்கொல்லி நோயாக மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வேகமாக பரவி வருகிறது கொரோனா வைரஸ்.இந்த கொரோனா மனிதனின் கண்ணுக்கு தெரியாமல் அவரது உடலுக்குள் சென்று இறுதியில் மரணத்திற்கு கொண்டு சென்றுவிடுகிறது. இத்தகைய கொடுமையான கொரோனா வைரசுக்கு எதிராக உலகமே போராடுகிறது. மேலும் இந்தியாவின் தரப்பிலும் பல்வேறு விதிகளையும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு மாநிலம் சார்பிலும் மாநில அரசுகளும் பல்வேறு விதிகளையும் கட்டுப்பாடுகளையும் ஒருசில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்குகளும் நடைமுறைப்படுத்த உள்ளன.

corona

மேலும் இந்தியாவின் சார்பில் இரண்டு விதமான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.  மத்திய அரசின் சார்பில் பல மாநிலங்களுக்கு  கொரோனா  தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல மாநில அரசு மருத்துவமனைகளில் 45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா  தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். அதன்படி நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி கொரோனா  தடுப்பு பணிக்காக நாளொன்றுக்கு 18 முதல் 19 மணிநேரம் பணியாற்றுகிறார் என்றும் அவர் கூறினார்.

மேலும் கொரோனா  தடுப்பு  மேலாண்மையில் மாநிலங்களுக்கு உதவி செய்ய மத்திய அரசு 24 மணி நேரமும் செயலாற்றி வருகிறது என்றும் அவர் கூறினார். மேலும் கொரோனா  எதிர்ப்புப் போரில் எவ்வித பாரபட்சமின்றி மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். மேலும் இந்த கொரோனா  தடுப்பு  விவகாரத்தில் அரசியல் சாயம் பூசுவது ஏற்புடையது அல்ல என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

From around the web