மூன்று ஊர்கள் முதலிடத்தில் இருந்து மக்களுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தர்மபுரி பொன்னகரம் ஒட்டன்சத்திரத்தில் ஆறு சென்டிமீட்டர் மழை பதிவு!
 
மூன்று ஊர்கள் முதலிடத்தில் இருந்து மக்களுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது!

தற்போது தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியது,. இதனால் பல பகுதிகளில் கோடையின் வெப்பமானது அதிகமாக காணப்படுகிறது. மேலும் ஒரு சில பகுதிகளிலும் இயல்பை காட்டிலும் வெப்பநிலையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். ஆயினும் ஒரு சில பகுதிகளில் கோடை மழை பெய்து கோடையின் வெப்பநிலையில் கோடையும் உஷ்ணமும் குறைக்கப்பட்டு மக்களுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது. மேலும் தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து மக்களுக்கு இன்பத்தைக் கொடுத் துள்ளது.rain

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தர்மபுரி பொன்னகரம்  ஒட்டன்சத்திரத்தில் தலா ஆறு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ராசிபுரம் வேடசந்தூரில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. எருமப்பட்டி ஆகிய இடங்களில் நாலு சென்டிமீட்டர் மழை பதிவாகி செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஓசூர், பவானி ,வேலூர், அன்னூர் ,ஊத்தங்கரை ஆகிய இடங்களில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தர்மபுரி பொன்னகரம் மற்றும் ஒட்டன்சத்திரம் 6 மீட்டர் மழை பதிவாகி தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு கடந்த 24 மணி நேரத்தில் பெய்த பகுதியாக உள்ளது.மேலும் இப்பகுதிகளில் வாழும் மக்கள் இந்த கோடை மழையினால் வெயிலின் உஷ்ணம் குறைக்கப்பட்டதாக  எண்ணி மழையை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர். மேலும் அப்பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையும் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

From around the web