மெட்ரோ ரயில் ஓடும், தியேட்டர்கள் திறக்கலாம்: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு

செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என சற்றுமுன் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் 7ஆம் கட்ட ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் சற்றுமுன் மத்திய உள்துறை அமைச்சகம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என அறிவித்துள்ளது ஆனால் விளையாட்டு, பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகளிலும் 100 பேர் வரை பங்கேற்க அனுமதி என்றும், மெட்ரோ ரயில் சேவை செப்.7ஆம் தேதி தொடங்கும் என்றும், திறந்த வெளி திரையரங்கம் செப்.21ம் தேதி
 

மெட்ரோ ரயில் ஓடும், தியேட்டர்கள் திறக்கலாம்: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு

செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என சற்றுமுன் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது

ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் 7ஆம் கட்ட ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் சற்றுமுன் மத்திய உள்துறை அமைச்சகம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என அறிவித்துள்ளது

ஆனால் விளையாட்டு, பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகளிலும் 100 பேர் வரை பங்கேற்க அனுமதி என்றும், மெட்ரோ ரயில் சேவை செப்.7ஆம் தேதி தொடங்கும் என்றும், திறந்த வெளி திரையரங்கம் செப்.21ம் தேதி முதல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பள்ளி – கல்லூரிகளுக்கு தடை தொடரும் என்றும், செப்.30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என்றும், கல்வி நிலையங்களில், 50% ஆசிரியர்களுடன் ஆன்லைன் வகுப்புகளை நடத்த அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிகளுக்குச் செல்ல அனுமதி என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

மேலும் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் உள்ளூர் அளவில் ஊரடங்கு பிறப்பிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதாவது மாநில, மாவட்ட, கோட்ட, நகர, கிராம அளவிலான ஊரடங்குகளை மாநில அரசுகள் பிறப்பிக்க கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மாநிலத்திற்கு உள்ளே மக்கள் சென்று வருவதற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது என்றும், மாநிலங்களுக்குள் மக்கள் சென்று வர இ பாஸ் உள்ளிட்ட எந்த நிபந்தனையும் விதிக்க கூடாது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது

From around the web