தமிழ்நாட்டில் சுங்க கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்!!

தமிழ் நாட்டில் சுங்க கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்
 
toll gate

தற்போது எதிர்கட்சியாக உள்ளது அதிமுக, மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கட்சியானது பாட்டாளி மக்கள் கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தது. பாட்டாளி மக்கள்  கட்சியின் நிறுவனராக உள்ளார் மருத்துவர் ராமதாஸ். அவர் தொடர்ந்து தமிழகத்தில் காணப்படும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருவார். அதன் வரிசையில் தற்போது இந்த கட்டண உயர்வு குறித்து ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அந்தப்படி தமிழ் நாட்டில் சுங்க கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.ramadass

மேலும் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 23 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்வு அமலில் உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வெளிப்படைத் தன்மை இல்லாமல் சுங்கக் கட்டணத்தை தொடர்ந்து உயர்த்துவது கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் சரக்குந்துகளுக்கு சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவது அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து உயருகிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

தேசிய நெடுஞ்சாலை அமைக்க ஆன செலவு வசூலிக்கப்பட்ட கட்டணம் குறித்த வெள்ளை அறிக்கை தேவை என்றும் அவர் கூறியுள்ளார். வெள்ளை அறிக்கை வெளியிடும் வரை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கட்டண உயர்வை நிறுத்த வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆண்டுக்கு ஆண்டு சுங்க கட்டணத்தை உயர்த்துவது மக்கள் மீதான பொருளாதாரத் தாக்குதல் என்றும் அவர் கூறியுள்ளார்.

From around the web