ஆறு மாதங்களுக்கு பின் திறக்கப்பட்டது ஆக்ராவின் தாஜ்மஹால்!

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு இருந்தன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து செப்டம்பர் 21 முதல் சுற்றுலா தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது 

இதன்படி செப்டம்பர் 21ஆம் தேதி முதல் தாஜ்மஹால் உள்பட பல சுற்றுலா தலங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சற்று முன்னர் தாஜ்மஹால் திறக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் தாஜ்மகாலை பார்க்க வருகை தந்து கொண்டிருக்கின்றனர் 

தாஜ்மகாலை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் ஆன்லைன் மூலம் மட்டுமே நுழைவு டிக்கெட்டுகள் வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தாஜ்மஹால் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் கிருமிநாசினி வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

From around the web