"அதிமுகவை என் உயிரில் இருந்து பிரிக்க முடியாது"; சசிகலா உருக்கமான ஆடியோ!!

அதிமுகவை என் உயிரில் இருந்து பிரிக்க முடியாது என்று சசிகலா  ஆடியோ வெளியாகி உள்ளது
 
sasikala

தற்போதைய தமிழக மக்கள் மனதில் எம்ஜிஆர் கட்சி என்றால் அனைவரும் முதலில் கூறுவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமே. அதன் பின்னர் இந்த கட்சியை ஜெயலலிதா வழிநடத்தினார். மேலும் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் கட்சியானது பல்வேறு பிளவுகள் காணப்பட்டது. ஓ பன்னீர்செல்வம் முதல்வராக அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார் .மேலும் இருவருக்கு இடையே முதலில் முரண்பாடு இருந்தாலும் தற்போது அவர்கள் ஒன்றிணைந்த கட்சியைக் கட்டிக் காத்து வருகின்றனர்.admk

இவர்களுக்கிடையே ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவில் பற்றி பல்வேறு தகவல்களும் இன்னல்களும் பிரச்சனைகளும் சர்ச்சைகளும் வரும். மேலும் அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் தண்டனை பெற்ற பின்னர் தற்போது தேர்தலுக்கு சில நாட்கள் முன்பே விடுதலை செய்யப்பட்டார். ஆயினும் அவருக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என்றே கூறலாம். ஏனென்றால் வாக்காளர் பட்டியலில் அவரின் பெயர் இல்லை என்றே கூறலாம்.

அவர் சில தினங்களாக கட்சியினரிடையே பேசும் ஆடியோக்கள் வெளியாகிவருகின்றன. மேலும் முன்னதாக பொதுவாக கட்சி என்றே அந்த ஆடியோவில் வெளியாகும் நிலையில் தற்போது அதிமுக என்று அழுத்தமாகக் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக 22 ஆடியோகளில் கட்சி என்றே குறிப்பிட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 23வது ஆடியோவாக இதில் அதிமுகவை என் உயிரில் இருந்து பிரிக்க முடியாது என்று சசிகலா உருக்கமான குரலில் கூறியுள்ளார். மேலும் முதன் முறையாக அதிமுக என்று குறிப்பிட்டு ஆடியோ வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கட்சி உறுப்பினர்களின் குரல் கேட்டு நான் சும்மா இருக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு இடையே குழப்பங்கள் அதிகம் நிலவுகிறது.

From around the web