வெளுக்க போகுது வெயில்!! "அடுத்த 4 நாளைக்கு"; அதுவும் 11 மாவட்டத்தில!!!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது!
 
sun

தற்போது நம் தமிழகத்தில் பல பகுதிகளில் கோடை காலம் நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் வெப்ப நிலையானது இயல்பே காட்டிலும் அதிகமாக காணப்படுகிறது. மேலும் ஒரு சில இடங்களில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் அனைவரும் மிகுந்த உஷ்ணத்தையும் கஷ்டத்தையும் எரிச்சலையும் உணர்கின்றனர். தமிழகத்தில் பல பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இருந்தாலும் தமிழகத்தில் கோடை காலம் என்பதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்றளவும் வெயிலின் வெப்பம் அதிகமாக காணப்படுகிறது.sun

இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் சில அதிர்ச்சிகரமான தகவல்களை கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு இதர மாவட்டங்கள் புதுவை காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதுவும் குறிப்பாக கிருஷ்ணகிரி தர்மபுரி திருப்பத்தூர் ராணிப்பேட்டை வேலூர் திருவள்ளூர் மாவட்டங்களில் இயல்பு விலையைவிட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. மேலும் காஞ்சி செங்கல்பட்டு திருவண்ணாமலை விழுப்புரத்தில் வெப்பநிலையானது 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் சென்னையில் வெப்பநிலை அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட்  ஆகவும் குறைந்தபட்சமாக 84 டிகிரி பாரன்ஹீட் அளவாகத் தணிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் வெப்பநிலையானது தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த உஷ்ணத்தையும் எரிச்சலையும் உணர்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web