பேஸ்புக்கின் இந்திய தலைவர் திடீர் ராஜினாமா: என்ன காரணம் 

 

உலகின் நம்பர்-1 சமூக வலை தளங்களில் ஒன்றாக இருந்து வரும் பேஸ்புக்கின் இந்திய தலைவர் திடீரென ராஜினாமா செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவரான அங்கிதாஸ் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் திடீரென அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் 

இது குறித்து அவர் அளித்த விளக்கத்தில், ‘பொது சேவையில் ஈடுபட இருப்பதாகவும் தனது பொது சேவை பணியை தொடர இருப்பதால் பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

ஆனால் பாஜக மற்றும் பிற வலதுசாரி தலைவர்களின் வெறுப்பைத் தூண்டும் வகையிலான பதிவுகளை பேஸ்புக்கில் இருந்து நீக்காமல் அவர்களுக்கு ஆதரவாக அங்கிதா  செயல்பட்டதால மீது புகார் எழுந்தது

இந்த புகாரின் காரணமாகத்தான் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து இருக்கலாம் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web