கீழடியில் ஆய்வு! "வெள்ளிக்காசு கண்டறியப்பட்டுள்ளது"-முதல்வர்!

கீழடியில் வெள்ளிக்காசு கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்
 
silver coin

திராவிட மொழிகளுக்கும் தாய்மொழியாக விளங்குகிறது தமிழ் மொழி. மேலும் தமிழ் மொழியானது உலகமொழிகளில் செம்மொழி என்ற பெயரையும் பெற்று விளங்குகிறது. தமிழ்மொழி பல்வேறு கிளை மொழிகளுக்கு உறுதுணையாகவும் காணப்படுகிறது. இத்தகைய தமிழ் மொழியானது லெமூரியா கண்டத்தில் கடற்கோளால் மூடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அது குறித்து அகழ்வாராய்ச்சிகள் மற்றும் பல தொல்லியல் நிபுணர்கள் தொடர்ந்து ஆராய்ந்து செய்துகொண்டு வருகின்றனர்.keeladi

அதன் தொடர்ச்சியாக கீழடியில் பல்வேறு விதமாக தகவல்கள் ஓலைச்சுவடிகள் கல்வெட்டுகள் போன்றவைகள் கண்டறியப்பட்டு வருகின்றன. மேலும் முன்பு வாழ்ந்த காலத்தில் தமிழர்களின் நாகரிகமும் கண்டறியப்பட்டு வருகிறது. இதன் வரிசையில் தற்போது கீழடி ஆய்வில் வெள்ளிக்காசு கண்டறியப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கீழடி அகழாய்வில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளிக்காசு கண்டறியப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

கீழடி நாகரிகம் கிமு ஆறாம் நூற்றாண்டு நாகரிகம் என தெரியவந்துள்ளது என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.கிமு ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தையது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் கூறுகின்றார். இந்திய துணை கண்டத்தின் வரலாறு இன் தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

From around the web