பட்டா வழங்க வில்லை! 300 குடும்பங்கள் தேர்தலைப் புறக்கணிப்பு!

பட்டா வழங்கக் கோரி தேர்தலைப் புறக்கணித்த தூத்துக்குடி மக்கள்!
 
பட்டா வழங்க வில்லை! 300 குடும்பங்கள் தேர்தலைப் புறக்கணிப்பு!

அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதியிலும் மிகவும் தீவிரமாக நடைபெறுகிறது. மேலும் வாக்களிக்க செல்பவர்களுக்கு சனிடைசர், முகக்கவசம், கையுறை போன்றவைகளும் கொடுக்கப்படுகிறது. மேலும் வாக்காளர்களின் உடல் வெப்ப நிலையும் பரிசோதிக்கப்பட்டு  வாக்களிக்கின்றனர். நிலையில் மேலும் வாக்குச்சாவடிகளில்  போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

tuticorin

மேலும் தேர்தல் அதிகாரிகள் வாக்காளர் மற்றும் பூத் ஸ்லிப் சரி பார்த்து வாக்காளர்களை வாக்களிக்க அனுமதிக்கின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பல வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். தற்போது தூத்துக்குடியில் மக்கள் தேர்தலைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். என்றும் தூத்துக்குடி மாநகராட்சியில் பகுதியில் பட்டா வழங்க வில்லை கண்டித்து அவர்கள் கூறுகின்றனர்.

இந்த போராட்டத்தில் 300 குடும்பங்கள் தேர்தலைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள ராஜீவ் நகர் 1வது தெரு முதல் 11 சேர்ந்த 1,500 வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் பட்டா வழங்க கோரிக்கை செய்து தேர்தலை புறக்கணிப்பது இதனால் அப்பகுதியில் கவலையான சூழ்நிலை நிலவுகிறது.

From around the web