இந்த ஆண்டு சாதாரணமாகத்தான் இருக்கும் தென்மேற்கு பருவமழை!

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை  இயல்பான அளவை ஒட்டி இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
 
இந்த ஆண்டு சாதாரணமாகத்தான் இருக்கும் தென்மேற்கு பருவமழை!

மக்கள் மத்தியில் கோடைகாலம் என்றாலே மிகுந்த அச்சமான நிலைமை தோன்றும். காரணம் என்னவெனில் கோடைகாலம் தோன்றினால் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து காணப்படும். என சென்னைவாசிகள் மிகவும் அச்சத்துடன் காணப்படுவார். மேலும் கோடைகாலம் தொடங்கினால் சூரியனின் தாக்கமானது சுட்டெரிக்கும்.

rain

மேலும் பல பகுதிகளில் வெப்ப நிலையானது  இயல்பான அளவை காட்டிலும் அதிகமாக காணப்படும். இந்நிலையில் தமிழகத்தில் சில தினங்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றன. இதனால் கனமழை பெய்யும் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் சந்தோஷத்துடன் உள்ளனர். மேலும் அப்பகுதியில் கோடையின் வெப்பம் தணிக்க பட்டதாகவும் எண்ணி மழையை அன்புடன் வரவேற்கின்றனர். இதனால் அப்பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது, அதன்படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஒட்டியே இருக்கும் என்று இயல்பான அளவை ஒட்டியே இருக்கும் என்று கூறியுள்ளது. மேலும் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரையான காலகட்டத்தில் பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் இந்திய வானிலை ஆய்வு மையமானது சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.ஆயினும் தமிழகத்தில் தற்போது வரை பல பகுதிகளில் மழை பெய்து வருவதால் மக்கள் நிம்மதியுடன் உள்ளனர்.

From around the web