சிறுமியின் உயிரிழப்புக்கு பின்னரும் "தொடரும் தரமற்ற உணவு விற்பனை"!!

ஆரணியில் தொடரும் தரமற்ற உணவுப் பொருட்களின் விற்பனை என்று தகவல் வெளியாகியுள்ளது
 
arani

சில தினங்களுக்கு முன்பாக ஆரணியில் ஒரு தனியார் ஓட்டலில் அழகிய உணவுகளை உணவு பாதுகாப்பு துறையினர் கைப்பற்றி அதனை அளித்தனர். மேலும் அங்கு சாப்பிட்ட பலருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு அவதிப்பட்டனர். மேலும் அவர்களில் சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஆரணியில் உள்ள அனைத்து கடைகளிலும் உணவு பாதுகாப்பு துறையினர் வரிசையாக சோதனை செய்து வருகின்றனர்.nandu

இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது .அதன்படி சிறுமியின் உயிரிழப்புக்கு பின்னரும் அதிகமாக தொடர்கிறது தரமற்ற உணவு விற்பனை என்று கூறுகின்றனர். மேலும் ஆரணியில் மீன், நண்டு உட்பட 15 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் ஓட்டல் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், உணவு பாதுகாப்பு துறையினர் கூறி நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் கடந்த 4 நாட்களில் ஆரணியில் இதுவரை 50 கிலோ வரையிலான தரமற்ற இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.இதனால் ஆரணியில் வாழும் மக்கள் ஹோட்டல்களில் சென்று சாப்பிடுவதற்கு கூட யோசிக்கும் நிலைமை காணப்படுகிறது.

From around the web