தமிழகத்திலும் பட்டாசு விற்பனைக்கு தடை செய்ய வேண்டும்: சீமான் 

 
தமிழகத்திலும் பட்டாசு விற்பனைக்கு தடை செய்ய வேண்டும்: சீமான்

ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசுகள் விற்பனை தடை செய்யப்பட்டது போலவே தமிழகத்திலும் பட்டாசு விற்பனைக்கு தடை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்

சுற்றுச்சூழல் மாசு காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்டது. இதனை அடுத்து தமிழகத்திலும் பட்டாசு வெடிக்க தடை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் பட்டாசு விற்பனைக்கு தடை செய்யப்படுவதோடு பட்டாசு தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுவதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்

ஏற்கனவே நவம்பர் ஏழாம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பட்டாசு வெடிப்பதற்கு ஏன் தடை செய்யக்கூடாது என பசுமை தீர்ப்பாயம், மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் சீமானின் இந்த கோரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web