புதிய மாவட்டத்தை புரட்டியெடுத்த மழை! எவ்வளவு மழைபதிவு தெரியுமா?

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையத்தில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது!
 
rain

தமிழகத்தில் தற்போது பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் கோடை மழை பெய்து வரும் மாவட்டங்களில் உள்ள மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை கோடை மழை பெய்யாமல் புயலால் ஏற்பட்ட மழையால் அங்கு வாழும் மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். ஏனெனில் இந்த புயலின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை நீரானது சாலையோரங்களிலும் வீடுகளிலும் புகுந்தன. இதனால் அங்கு வாழும் மக்கள் இன்னலில் உள்ளனர். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலேயே அதிக மழை பெய்ததாக கூறப்படுகிறது.kallakurichi

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராபாளையத்தில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதை தொடர்ந்து திருச்சியிலே 7 சென்டி  மீட்டர் மழை பதிவாகியுள்ளது .வீரகனூர் திருப்பத்தூர் குழித்துறை பெரம்பலூர் கடையநல்லூர்  போன்ற பகுதிகளில் ஐந்து சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திண்டுக்கல் நத்தம் திருக்காட்டுப்பள்ளி சமயபுரம் புள்ளம்பாடி மதனபூண்டி போன்ற பகுதிகளில் தலா 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

அதை தொடர்ந்து செட்டிகுளம் சின்னக்கல்லார் பொன்மலை  பள்ளிப்பட்டு தியாகதுருகம் போன்ற பகுதிகளிலும் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கோடையிலும் போதும் பல்வேறு பகுதிகளில் இத்தகைய மழை பொழிவு ஏற்பட்டது மக்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. மேலும் கோடையில் வெப்பமானது பல பகுதிகளில் குறைவாக காணப்படுகிறது.

From around the web