26 ஆம் தேதி வரை கொட்டித் தீர்க்க போகிறது மழை! "வானிலை ஆய்வு மையம்"

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாவட்டங்களில் ஏப்ரல் 26ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது!
 
26 ஆம் தேதி வரை கொட்டித் தீர்க்க போகிறது மழை! "வானிலை ஆய்வு மையம்"

தமிழகத்தில் சில தினங்களாக வெயிலின் தாக்கமானது சில பகுதியில் அதிகரித்துள்ளது  அறியப்படுகிறது. மக்கள் அனைவருக்கும் அச்சத்தைக் கொடுக்கும் கோடை காலமான தொடங்கியது. அதனால் பல பகுதிகளிலும் வெயிலின் தாக்கமானது அதிகரித்துள்ளது. மேலும் வெயிலின் தாக்கமானது  சுட்டெரிக்கிறது.தமிழகத்தில் ஒரு சில தினங்களில் சில மாவட்டங்களில் கன மழையும் சில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்தது. இதனால் மாவட்டத்தில் இருந்த மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.

weather

மேலும் மாவட்டத்தில் கோடையின் வெப்பம் குறைவாக காணப்பட்டது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் இன்பமான தகவலைகூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது .அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 26-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

மேலும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவலோகத்தில் 4 சென்டி மீட்டர் மழையும், சித்தூரில் 3 சென்டி மீட்டர் மழையும் கோவில்பட்டியில் 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இரு தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்ததும் குறிப்பிடத்தக்கது.  தற்போது தொடர்ந்து தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்து வருவதால் அப்பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த சந்தோசத்துடன் மழையை வரவேற்கின்றனர்.

From around the web