நஷ்டத்தில் இருக்கும் ரயில்வே; மேலும் ஏழு சிறப்பு ரயில்கள் ரத்து!!அதுவும் இவ்வளவு நாளா?

போதிய பயணிகள் இல்லாததால் 7 சிறப்பு ரயில்களை ரத்து செய்துள்ளது தெற்கு ரயில்வே!
 
நஷ்டத்தில் இருக்கும் ரயில்வே; மேலும் ஏழு சிறப்பு ரயில்கள் ரத்து!!அதுவும் இவ்வளவு நாளா?

தற்போது நாடெங்கும் ஊரடங்கு என்ற பேச்சுவார்த்தை பல மாநிலங்களில் நிலவுகிறது. இதனால் மக்கள் அனைவரும் வெளியூர் பயணத்தை முற்றிலுமாக தவிர்க்கின்றனர். மேலும் வெளியூர் பயணங்கள் செலவு குறைந்ததாக காணப்படும் ஒரு நெடுந்தூர பயணம் என்றால் அனைவரும் முதலில் கூறுவது ரயில்வே தான். ஆனால் தற்போது நாட்டில் பல பகுதியில் ஊரடங்கு நிகழ்வதால் ரயில்வே போக்குவரத்து மிகுந்த நஷ்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நம் தமிழகத்திலும் இரண்டு வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் ரயில்வே போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.southern railway

இதனால் மேன்மேலும் ரயில்வே போக்குவரத்து மிகுந்த பாதிப்படைகிறது. இந்நிலையில் தற்போது நேற்றைய தினம் தெற்கு ரயில்வே சார்பில் 8 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து தற்போது மேலும் 7 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே கூறுகிறது. மேலும் போதிய பயணிகள் இல்லாததால் இந்த 7 சிறப்பு ரயில்கள் ரத்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி எழும்பூர் முதல் மன்னார்குடி எக்ஸ்பிரஸ் மே 17ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது.

கண்ணுர் முதல் கோவை எக்ஸ்பிரஸ் மே 17ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவை முதல் கண்ணூர் எக்ஸ்பிரஸ் மே 17ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை ரத்து செய்ய பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஆலப்புழா முதல் கண்ணூர் வரையிலான எக்ஸ்பிரஸ் மே 17ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் முதல் திருச்சி வரை எக்ஸ்பிரஸ் மே 17ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை , திருச்சி முதல் எழும்பூர் எக்ஸ்பிரஸ் மே 17ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை, மன்னார்குடி முதல் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் மே 18ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது.

From around the web