தாமரை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு தாமரை மாலை அணிவித்தனர் பொதுமக்கள்!

நடிகை குஷ்புவுக்கு ஆரத்தி எடுத்து தாமரை மாலை அணிவித்தனர் பொதுமக்கள்!
 
தாமரை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு தாமரை மாலை அணிவித்தனர் பொதுமக்கள்!

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் பல கட்சிகள், பல்வேறு கட்சிகளின் கூட்டணியில் உள்ளது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக கூட்டணியில் உள்ளது. அதிமுக தரப்பிலிருந்து பாஜக கட்சிக்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் முருகன் தாராபுரம் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளார். மேலும் கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட உள்ளார்

bjp

மேலும் நடிகை குஷ்புவும் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை அவர் பிரச்சாரத்துக்காக அங்கு உள்ள பகுதிகளில் சென்றார். குறிப்பாக வரதராஜபுரம் போன்ற பகுதிகளில் மக்களை வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வந்தார். அப்போது மக்கள் அவர்களுக்கு ஆரத்தி எடுத்தும் மலர்களை தூவியும் மிகுந்த வரவேற்பு கொடுத்தனர்.

மேலும் அவருக்கு தாமரை மாலை அணிவித்தும் மிகுந்த வரவேற்பு கொடுத்தனர். இந்நிலையில் தமிழகத்தில் பாஜகவின் நட்சத்திர பேச்சாளராக நரேந்திர மோடியின் பெயர் இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் பிரதமர் மோடி தமிழகம் வருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web