கொள்கையோ தலைவரோ இல்லாத கட்சி காங்கிரஸ் என்று கூறுகிறார் பாரத பிரதமர்!

மிகவும் பலவீனமாக உள்ள காங்கிரஸ் கட்சி யாருடன் கைகோர்க்க உள்ளது அசாமில் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் கூறினார்!
 
கொள்கையோ தலைவரோ இல்லாத கட்சி காங்கிரஸ் என்று கூறுகிறார் பாரத பிரதமர்!

சட்டமன்றதேர்தலானது ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. மிகவும் பலம் வாய்ந்த கட்சியான அதிமுக கட்சி தனது கூட்டணியுடன் பாரதிய ஜனதா கட்சி  இணைந்து உள்ளது எதிர்க்கட்சி திமுகவுடன் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி உள்ளது. இது மத்தியில் இத்தேர்தலானது தமிழகம் மட்டுமின்றி மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரியிலும் நடைபெற உள்ளது.

bjp

இதற்காக ஆளும் கட்சியாக உள்ள பாரதிய ஜனதா கட்சி அந்தந்த மாநிலங்களில் சென்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மத்தியிலிருந்து அமைச்சர்களும் வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இந்திய பாரத பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி அசாமின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

அப்போது அவர் கூறினார்" எந்த ஒரு தலைவரும் கொள்கையும் இல்லாத கட்சி காங்கிரஸ் கட்சி" எனவும் அவர் கூறினார். நிலையான சிந்தனை இல்லாத  காங்கிரஸ்  ஆசாமி நிலையான ஆட்சியை தர முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் மிகவும் பலவீனமாக இருப்பதால் யாருடன் கைகோர்க்க  தயாராக இருக்கிறது எனவும் அவர் காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளார்.

இதனால் மிகுந்த பரபரப்பான சூழல் நிலவுகிறது.மேலும் சில தினங்களில் நரேந்திர மோடி தமிழகத்திலும்  தேர்தல் பரப்புரை மேற்கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழக பாஜகவில் வெளியிட்ட நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web