நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கொரோனாவை முறியடிக்க இயலும் நம்பிக்கை தெரிவிக்கும் பாரத பிரதமர்!

கொரோனா இரண்டாவது அலை காரணமாக தற்போது இந்திய நாட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!
 
நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கொரோனாவை முறியடிக்க இயலும் நம்பிக்கை தெரிவிக்கும் பாரத பிரதமர்!

மக்கள் மத்தியில் தற்போது ஆட்கொல்லி நோயாக வளர்ந்துள்ளது கொரோனா. இந்தியாவில் கடந்த ஆண்டு தொடங்கிய போது கொரோனா இந்தியாவில் வர தொடங்கியது. ஆனால் இந்திய நாடு எந்த ஒரு நாடும் பின்பற்ற தயங்கிய முழு ஊரடங்கு நடைமுறை படுத்தி அதன் பின்னர் கடந்த ஆண்டின் இறுதிக்குள் கொரோனாநோயினைக் கட்டுப் படுத்தினார். இந்நிலையில் சில தினங்களாக இந்நோயின் தாக்கம் ஆனது மீண்டும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக பல்வேறு மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கு தங்கள் மாநிலங்களில் அறிவித்துள்ளனர்.

modi

இந்நிலையில் தற்போது பாரத பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்காக இன்று இரவு 8:45 மணிக்கு உரையாற்றுவார் கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது அவர் நாட்டு மக்களிடம் உரையாற்ற தொடங்கிவிட்டார். அதன்படி அவர் கொரோனா இரண்டாவது அலையால் நாம் மீண்டும் பாதிப்புக்குள்ளாகி உள்ளோம் என்றும் அவர் கூறினார். மேலும் நம் நாட்டில் மிகப்பெரிய மருந்து நிறுவனங்கள் உள்ளன. எனவே கவலை தேவையில்லை என்றும் அவர் கூறினார். மேலும் மக்கள் நினைத்தால் கொரோனாவை முறியடிக்க இயலும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் மருந்து நிறுவனங்களுடன் உற்பத்தியை அதிகரிக்க தொடர்ந்து பேசி வருகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும் முன் களப்பணியாளர்கள் துணை நிற்போம் என்று மக்களிடம் அழைப்பு விடுத்துள்ளார். தற்போதைய பாதிப்பில் இருந்து மீண்டு வர முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .மேலும் குறுகிய காலத்தில் மிக அதிக உற்பத்தியை உறுதி செய்கிறோம் என்றும் அவர் கூறினார். மேலும் உலகிலேயே மிக குறைவான விலையில் தடுப்பூசிகள் கிடைக்கிறது என்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார் மேலும் பல பகுதிகளில் ஆக்சிசன் மற்றும் தடுப்பூசிகள் தட்டுப்பாட்டை சமாளிக்க சிறப்பு முகாம் உருவாக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

From around the web