2 வாழைப்பழத்தின் விலை ரூ440; உறைந்து போன ராகுல் போஸ்

பாலிவுட்டில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராகுல் போஸ், இவர் ஒரு திரைப்படத்திற்காக சண்டிகரில் ஒரு தனியார் 5 நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார். அங்கு அவர் காலை எழுந்து உடற்பயிற்சி செய்துவிட்டு சாப்பிடுவதற்காக 2 வாழைப்பழத்தை ஆர்டர் செய்துள்ளார். அதை வழங்கிய அந்த ஓட்டல் நிர்வாகம் அதற்காக ரூ442.5 பில் செய்துள்ளது. இதை குறிப்பிட்டு ஒரு செல்பி வீடியோ எடுத்து அந்த நடிகர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் பில்லில் உள்ள தொகை 5 சதவீதம் ஜிஎஸ்டியுடன் சேர்ந்து
 

பாலிவுட்டில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராகுல் போஸ், இவர் ஒரு திரைப்படத்திற்காக சண்டிகரில் ஒரு தனியார் 5 நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார். அங்கு அவர் காலை எழுந்து உடற்பயிற்சி செய்துவிட்டு சாப்பிடுவதற்காக 2 வாழைப்பழத்தை ஆர்டர் செய்துள்ளார். 

அதை வழங்கிய அந்த ஓட்டல் நிர்வாகம் அதற்காக ரூ442.5 பில் செய்துள்ளது. இதை குறிப்பிட்டு ஒரு செல்பி வீடியோ எடுத்து அந்த நடிகர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

மேலும் பில்லில் உள்ள தொகை 5 சதவீதம் ஜிஎஸ்டியுடன் சேர்ந்து இருந்தது. ஜிஎஸ்டி விதியின் படி பிரஷ் புரூட்களுக்கு எந்த விதமான ஜிஎஸ்டி கிடையாது. ஆனால் அவர்கள் பில்லில் ஜிஎஸ்டி சேர்த்துள்ளனர். 

2 வாழைப்பழத்தின் விலை ரூ440; உறைந்து போன ராகுல் போஸ்

இரண்டு வாழைப்பழம் 442 ரூபாயா? என்று மக்கள் அதிர்ச்சியில் இந்த வீடியோவினைப் பார்த்து வருகின்றனர்.

2 வாழைப்பழத்திற்கு 442 ரூபாய் என்பதைவிட, அதற்கு 22 ரூபாய் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்பதே இவ்விஷயத்தை பரபரபாக்கியது.

22 ரூபாய்க்கு ஒரு சீப்பு வாழைப்பழமே வாங்கி இருப்போம் என்று கமென்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

From around the web