விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது பிரச்சாரத்தில் ஸ்டாலின்!

ராமநாதபுரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணியில் தேர்தலை சந்திக்க உள்ளன.  தமிழகத்தின் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக கட்சியானது தன்னுடன் கூட்டணியாக தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வைத்துள்ளது. மேலும் மதிமுக, விசிக போன்ற கட்சியையும் தன்னுடன் கூட்டணியாக வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.

dmk

மேலும் திமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அத்தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டார். இந்நிலையில் திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதனடிப்படையில் தற்போது அவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவர் கூறினார், விலைவாசி கடுமையாக உயர்ந்ததாகவும் கூறினார். மேலும் ஆட்சியாளர்கள் விலைவாசி குறித்து சிறிதும் கவலைப்படவில்லை எனவும் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார்.

From around the web