அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்கள் அனைத்தும்  "அறிவிப்பாகவே" உள்ளது!!

அதிமுக ஆட்சியில் கூறப்பட்டவை அனைத்தும் அறிவிப்புகளக உள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவையில் கூறியுள்ளார்
 
admk

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது.  தமிழகத்தில் முதல்வராக உள்ளார் மு க ஸ்டாலின். மேலும் அவர் அவ்வப்போது மக்களுக்கு பிரயோசனமான சில அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மேலும் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். இதனை எதிர்க்கட்சியினரும் வரவேற்கின்றனர். மேலும் அவ்வப்போது சட்டப்பேரவையில் வாக்குவாதங்களும் காணப்படும். மேலும் அதற்கு தக்க பதிலாக திமுக பதில் அளிக்கும்.senthil balaji

மேலும் தற்போது தமிழகத்தில் மின்சாரத்துறை அமைச்சராக உள்ளார் செந்தில் பாலாஜி. அவர் மின்சார துறை பற்றிய தகவல்களை புள்ளி விவரத்தோடு சட்டப்பேரவையில் அறிவித்தார். மேலும் தற்போது எதிர்க்கட்சியை பற்றியும் சில தகவல்களை கூறியுள்ளார். அந்த படி அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் அறிவிப்புகளாகவே உள்ளது என்று அவர் கூறியுள்ளார். சர்க்கரை என்ற காகிதத்தில் எழுதினால் இனிக்காது திட்டங்களை செயல் படுத்தினால் தான் பலனளிக்கும் என்று செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

கடந்த ஆட்சியில் அறிவித்த மின் திட்டங்களில் 1200 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிலுவையில் உள்ளன என்றும் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். தமிழகத்தை மின் மிகை மாநிலமாக உயர்த்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்றும் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் 3.16 கோடி மின் இணைப்புகள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். இதில் விவசாய இலவச மின் இணைப்புகள் 22 லட்சமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

2006 முதல் 2011 ஆண்டு திமுக ஆட்சியில் 2.79 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 2011 முதல் 2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 82 ஆயிரம் விவசாய மின் இணைப்பு, 2016 முதல் 2023-ம் ஆண்டில் 1.38 லட்சம் இணைப்பு மட்டுமே வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இதை விட குறைவான விவசாய மின் இணைப்பு வழங்கியது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

From around the web