பிக்பாஸ் நிகழ்ச்சியில் கட்சி சின்னம்: எப்படி அனுமதித்தது டிவி நிர்வாகம்?

 

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமலஹாசன் அந்த நிகழ்ச்சியின் இடையிடையே அரசியல் பேசி வருவது தெரிந்ததே. குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையிடையே தமது கட்சிக்கு ஆதரவான சில வார்த்தைகள் பேசுவார் என்பதும், நாளை நமதே என்ற வார்த்தையை அவர் அடிக்கடி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பயன்படுத்துவார் என்றும் தெரிந்தது 

இந்த நிலையில் நேற்று அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் போது கையில் ஒரு கர்சீப் போன்ற துணியை கட்டி இருந்தார். அதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இதற்கு சமூக வளைதளத்தில் கண்டனங்கள் குவிந்து உள்ளன. அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் தன்னுடைய கட்சியின் சின்னத்தை புகுத்தும் வகையில் கமல்ஹாசன் நடந்துகொண்டதாகவும் இதை எப்படி தொலைக்காட்சி நிர்வாகத்தினர் அனுமதித்தார்கள் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கமலஹாசன் தனது கட்சியை பிரபலப்படுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் 

ஆனால் இது தற்செயலாக நடந்த ஒன்று  தனது கட்சியை பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகுத்த வேண்டும் என்ற அவசியம் கமல்ஹாசனுக்கு இல்லை என்றும் கமல் தரப்பினர் விளக்கம் அளித்து வருகின்றனர்

From around the web