1957 ஆண்டு அல்ல கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை!!!எங்கு தெரியுமா?

புதுச்சேரியில் இன்று புதிதாக ஆயிரத்து 957 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது!
 
corona

தற்போது உலகமெங்கும் கொரோனாவின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் நம் இந்தியாவில் இதற்கு எதிர்மறையாக நகர்கிறது. அதன்படி கடந்த ஆண்டு இந்த நோயானது கட்டுப்படுத்த பட்டது ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இந்த கொரோனா நோயின் தாக்கம் ஆனது தலைவிரித்தாடுகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் ஊரடங்கு அமர்த்தப்பட்ட ஒரு சில மாநிலங்களில் தற்போது இந்தகொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது கணிசமாக குறைந்து வருவது ஓரளவு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.pondicherry

இந் நிலையில் தென் மாநிலங்களில் இந்த பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது .அந்த வரிசையில் தமிழகம் கர்நாடகா கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பானது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தென்மாநிலங்களில் யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரியிலும் இந்த கொரோனா பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதனை நிரூபிக்கும் வகையிலும் புதுச்சேரியில் அதிகரித்து வருகிறது இந்த ஆட்கொல்லி நோய்.

இந்த புதுச்சேரியில் தற்போது புதிதாக 1957 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தாலும் இந்த கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருவது மக்களை வேதனைப் படுத்துகிறது.

From around the web