கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குழந்தை பிறப்புகளின் எண்ணிக்கை குறைவு!!

சென்னையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குழந்தை பிறப்பானது குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது!
 
baby

முன்னொரு காலத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் என்று வாசகம் அனைத்து பகுதிகளிலும் எழுதப்பட்டிருக்கும். மேலும் காலப்போக்கில் நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று பேச்சுவார்த்தைகளும் அவ்வப்போது பேசப்பட்டன. ஆனால் காலங்கள் செல்ல செல்ல நாம் இருவர் நமக்கு ஏன் ஒருவர்? என்ற வாசகம் தற்போது அநேக பகுதிகளில் அதிகமாக பிரதிபலிக்கின்றன. காரணம் என்னவெனில் பெரும்பாலும் அவர்கள் குழந்தை பிறப்பதை விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும் தற்போதைய விலைவாசியில் மத்தியில் குழந்தை பிறந்து பள்ளியில் படிக்க வைத்து பின்னர் எதிர்கால பிரச்சனை என அனைத்தையும் யோசித்து தம்பதிகள் குழந்தை பிறப்பிற்கு அதிகமாக விருப்பம் தெரிவிக்க வில்லை என்றே கூறலாம்.chennai

இந்நிலையில் தற்போது புள்ளிவிவரங்கள் அடிப்படையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டும் குழந்தை பிறப்பானது மிகவும் குறைந்ததாக கூறப்படுகிறது. அதன்படி கடந்த ஆண்டை விட இந்தாண்டு சென்னையில் குழந்தை பிறப்பு மிகவும் கணிசமாக குறைந்து காணப்படுகிறது. மேலும் காரணம் என்னவெனில் தொடங்கி எங்கள் வீட்டிலேயே இருக்கும் சூழல் இருப்பதால் அவர்கள் வெளியே சென்று வேலைக்கு கூட போக முடியாத நிலை தற்போது நிலவுவதால் குழந்தை பிறப்பிற்கு மிகவும் தயங்குகின்றனர்.

மேலும் இந்த ஆண்டில் 42 சதவீதம்  குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து உள்ளதாக தகவல் கூறுகிறது. மேலும் சென்னையில் பொதுவாக குழந்தைகள் 99% மருத்துவமனையில் பிறப்பு  இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அவ்வாறு இல்லை என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மேலும் சென்னையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 7030 குழந்தைகள் பிறந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நடப்பாண்டு ஏப்ரலில் வெறும் 4094 குழந்தைகள் மட்டும் பிறப்பு மட்டுமே பதிவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு ஏப்ரலில் 4094 குழந்தைகள் மட்டுமே பதிவாகி உள்ளது என்றும் கூறுகின்றனர்.

மேலும் அவர்கள் தம்பதிகள் கூறும் காரணம் என்னவெனில் நிலையற்ற வேலைவாய்ப்பு எதிர்கால நிதி பற்றாக்குறை ஆகியவையே பெரும் காரணமாகவும் பெரும் சோகமாக மற்றும் உள்ளதால் அவர்கள் குழந்தை பிறப்பிற்கு அதிகமாக தடை செய்கின்றனர். மேலும் சென்னையில் கருத்தடை சாதனங்களின் விற்பனையானது இந்தாண்டு 15 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அங்குள்ள புள்ளி விவரங்கள் கூறுகிறது.

From around the web