அதிரடி அமைச்சரின் அடுத்த கட்ட நடவடிக்கை; அதிரும் எதிர்க்கட்சி!!

புதிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டத்தை மாநில கல்வித் துறை அமைச்சருடன் நடத்துவதே ஏற்புடையது!
 
அதிரடி அமைச்சரின் அடுத்த கட்ட நடவடிக்கை; அதிரும் எதிர்க்கட்சி!!

தற்போது இன்றுவரை நடப்பாண்டின் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற வில்லை. காரணம் என்னவெனில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் நடக்கும் சமயத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேதி தள்ளிப்போனது. இதனை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலுக்கு பின் பொதுத் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்த போது திடீரென  கொரோனா தாக்கம் அதிகரித்து மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளது. இதனால் மாணவர்களின் நலன் கருதி தற்போது வரை பொதுத்தேர்வு நடைபெறவில்லை.pokriyal

 தற்போது தமிழகத்தில் புதிய அரசு புதிய ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. புதிய முதல்வராக திமுக தலைவரான மு க ஸ்டாலின் உள்ளார். மேலும் அவருக்கு உதவி செய்யும் வண்ணமாக அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்களும் குறிப்பாக பள்ளி கல்வித் துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி சில தினங்களாக மக்கள் மனதில் நல்லதொரு இடத்தினையும் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் சில தகவல்களை அளித்துள்ளார். அதன்படி புதிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டத்தை மாநில கல்வித் துறை அமைச்சருடன் நடத்துவதே ஏற்புடையது என்று கூறியுள்ளார். மேலும் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். மேலும் அரசின் சார்பில் மிக முக்கிய கருத்துக்கள் பரிந்துரைகளை தெரிவிக்க தயார் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

மேலும் மாநில கல்வித்துறை செயலாளருடன் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாளை காணொளியில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காணொளியில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From around the web