தாமரையை மலர செய்ய பாடுபடும் அடுத்த தலைமுறையினர்: வைரலாகும் புகைப்படம்!

 

வட இந்தியாவில் மிகப்பெரிய செல்வாக்கோடு பாஜக இருந்தாலும் தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் அக்கட்சி மிகவும் பின்தங்கியே உள்ளது. குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் நோட்டவுடன் போட்டி போடும் அளவிற்கு தான் அந்த கட்சியின் வலிமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

ஆனால் அதே நேரத்தில் கடந்த சில மாதங்களாக பாஜக விசுவரூபம் எடுத்து வளர்ந்து வருவதையும் மறுக்க முடியாது. குறிப்பாக வேல் யாத்திரை அக்கட்சியை மிகவும் பிரபலமாகி விட்டது என்றே கூறலாம் 

bjp

இந்த நிலையில் அடுத்த தலைமுறையினர் பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது சமீபத்தில் கேரளாவில் பள்ளி குழந்தைகள் பாஜகவின் தாமரை சின்னத்தை சுவர்களில் வரைந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் இந்த புகைப்படத்திற்கு பாசிட்டிவ் கமெண்டுகள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

கேரளாவில் பாஜக நுழையவே முடியாது என ஒரு காலத்தில் கூறப்பட்ட நிலையில் தற்போது அடுத்த தலைமுறையினர் பாஜகவை மலரச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web