பெண்களை இழிவுபடுத்தி பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறும் எம்பி!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணியில் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது. மேலும் தமிழகத்தில் பல கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அறிவித்து அந்த வேட்பாளர் வேட்பு மனுவையும் தாக்கல் செய்திருந்தனர்.தமிழகத்தில் மிகவும் பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாக உள்ள திமுகவுடன் கூட்டணி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சிகளை வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

மேலும் அவர் கடந்த முறை போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாகவும் அதற்கான வேட்பு மனுவையும் மு க ஸ்டாலின் தாக்கல் செய்திருந்தார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.திமுக சார்பில் எம்பியாக இருப்பவர் கனிமொழி.
அவரும் திமுக வேட்பாளர் பலரையும் ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் தற்போது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார். பெண்களை இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.எந்த அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்தி விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. இதை எல்லாருமே மனதில் வைத்துக் கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியார் விரும்பிய சமூக நீதி ஆகும் எனவும் திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார்.