கிணற்றில் விழுந்த குட்டி யானையை விட்டு சென்றது தாய் யானை!

பிரிந்து சென்ற தாய் யானை மீண்டும் வந்து அதே பகுதிக்கு வரும் என நம்பிக்கையில் வனத்துறையினர் காத்துள்ளனர்!

 
கிணற்றில் விழுந்த குட்டி யானையை விட்டு சென்றது தாய் யானை!

மக்களிடையே அதிகம் பிடித்துள்ள விலங்குகளாக காணப்படுவது நாய் மட்டும் பூனை. ஆனால் இந்த நாய் மட்டும் பூனையை விட அடுத்த இடத்தில் மக்கள் அனைவருக்கும் மிகவும் செல்லப்பிராணியாக நண்பனாகவும் காணப்படுவதே யானை. மேலும் இந்த யானையானது பல்வேறு சர்க்கஸ் கூடாரங்களில் பயன்படுத்தப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் ஒரு சில பகுதிகளில் யானை ஆதிக்கம் அதிகமாக காணப்படுகின்றன. ஆனால் அப்பகுதிகளில் யானை தாக்கம் என்று சொல்வதைவிட மனிதனின் ஆதிக்கமே என்று சொல்லலாம்.  இதனால் யானையின் தாக்கம் ஒரு சில பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.elephant

மேலும் ஒரு சில பகுதிகளில் யானையானது ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல் மனிதனையும் கொல்கிறது. இந்நிலையில் தற்போது யானை தொடர்பான சம்பவம் தேனி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வருசநாடு பகுதியில் அருகே உள்ள கிராமத்தில் தண்ணீர் குடிக்க வந்த யானை மற்றும் அதன் குட்டி கிணற்றில் தவறி விழுந்தது. யானையின் அலறல் சத்தத்தை கேட்டு அவ்வூர் மக்கள் வந்து போராடி முதலில் யானை குட்டியை காப்பாற்றினர். பின்னர் அந்த யானை குட்டியை அங்குள்ள மரத்தில் கட்டி வைத்தனர்.

மேலும் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் யானையானது மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட உடன் யானை உடனடியாக வனத்திற்குள் சென்றது. மேலும் தன் குட்டியை எதையும் கண்டுகொள்ளாமல் சென்றது. இதனால் வனத்துறையினர் பிரிந்து சென்ற தாயை மீண்டும் அதே பகுதிக்கு வரும் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் யானை பார்த்து யானைக்குட்டியை சேர்க்கவும் போராட்டத்தில் உள்ளனர். மேலும் அவர்கள் ஆறு மணிநேரத்திற்கு மேலாகவும் காத்துக் கொண்டுள்ளனர். இந்த யானை குட்டி இரண்டு மாத குட்டியாக காணப்படுவதால் தன்னால் இலைகளைக் கூட உன்ன முடியாத அளவிற்கு காணப்படுகிறது.

From around the web