"அடுத்த நூற்றாண்டிலும் பேசப்படுபவர் கலைஞர்"; கலைஞருக்கு புகழாரம் சூட்டும் கவிஞர்!

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞருக்கு புகழாரம் சூட்டியுள்ளார் கவிஞர் வைரமுத்து!
 
vaira muthu

தற்போது தமிழகத்தில் திமுக கட்சியினரிடையே மிகவும் கொண்டாட்டமான நாளாக இன்றும் காணப்படும். ஏனென்றால் திமுக கட்சியின் முன்னாள் முதல்வரும் முன்னாள் தலைவருமான கலைஞரின் பிறந்தநாள் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் பல பகுதிகளில் பல்வேறு விதமான திட்டங்களும் இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் அவரது மகனும் தற்போதைய தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் அவருக்கு மரியாதை செலுத்தினார்.kalaingnar

கலைஞரைப் பற்றி கவிஞர் ஒருவர் சில தகவல்களை கூறியுள்ளார். அதன்படி தமிழை வளர்த்து தமிழினத்தை மீட்டெடுத்த கலைஞர் அடுத்த நூற்றாண்டிலும் பேசப்படுவார் என்று வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார். எழுத்தால் தமிழில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் தமிழால் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கலைஞர் என்றும் கவிஞர் வைரமுத்து தனது கவிதையின் பாணியில் கூறியுள்ளார். மேலும் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் வைரமுத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் கலைஞரின் புத்தகங்களை ஒருவருக்கொருவர் பரிசளித்து பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என வைரமுத்து பேட்டி அளித்துள்ளார். மேலும் இது போன்ற பல தலைவர்களும் முத்தமிழ் அறிஞர் மு கருணாநிதி பிறந்த நாளன்று பல்வேறு விதமான புகழாரம் சூட்டி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கலைஞரின் பிறந்த நாள் மிகவும் நல்வரவோடு கொண்டாடப்படுகிறது

From around the web