இரட்டை குழந்தைகளை தூக்கி சென்ற குரங்கு: ஒரு குழந்தை பலியான சோக சம்பவம்

தஞ்சையில் பிறந்து ஒரு வாரமே ஆன இரட்டை குழந்தைகளை குரங்குகள் தூக்கி சென்றதில் ஒரு குரங்கு பலியானதால் அந்த குழந்தையின் தாய் கதறி அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தஞ்சாவூர் அருகே உள்ள கோட்டை அகழி என்ற பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகிய நிலையில் சமீபத்தில்தான் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன
இந்த நிலையில் குழந்தைகள் நேற்று மதியம் தூங்கி கொண்டிருந்த போது தாய் புவனேஸ்வரி கழிவறைக்கு சென்றார். அப்போது குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டதை அடுத்து வெளியே வந்து பார்த்தபோது குழந்தைகளை குரங்குகள் தூக்கிச் செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரது அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஒன்றுகூடி குரங்குகளை விரட்டினர்.
குரங்குகள் ஒரு குழந்தையை வீட்டின் ஓட்டின் மீது போட்டு விட்டு சென்றது. இன்னொரு குழந்தையை அருகில் இருந்த குளத்தில் வீசியதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர் இதனையடுத்து குளத்தில் வீசப்பட்ட குழந்தையை எடுத்து பார்த்தபோது அது பரிதாபமாக இறந்து இருந்தது
தனது குழந்தை இறந்ததை பார்த்து தாய் புவனேஸ்வரி கதறி அழுத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த இந்த பகுதியில் உள்ளவர்கள் கூறியபோது இந்த பகுதியில் 20க்கும் மேற்பட்ட குரங்குகள் கடந்த பல மாதங்களாக வீட்டிற்குள் நுழைந்து உணவு பொருட்களை எடுத்துச் செல்வதாகவும் இதனை கட்டுப்படுத்த பலமுறை வனத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலனில்லை என்றும் கூறியுள்ளனர்.