தடுப்பூசியால் நிகழ்ந்த அதிசயம்: பார்வை இழந்த மூதாட்டி ஆச்சரியம்!

 
eye sight

கண் பார்வை இழந்த மூதாட்டி ஒருவர் தடுப்பூசி போட்ட உடன் கண் பார்வை பெற்ற அதிசய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது 

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்வதற்காக தடுப்பூசி போட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டவர்களுக்கு பெரும்பாலும் கொரோனா வைரஸால் பாதிப்பு இல்லை என்ற புள்ளிவிபரம் அனைவரையும் நிம்மதிக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் பார்வை இழந்த மூதாட்டி ஒருவர் சமீபத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் ஒரு சில நாட்களில் அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக பார்வை திரும்பிய அதிசயம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தடுப்பூசி போட்டுக்கொண்டால் பக்க விளைவுகள் ஏற்படும் என்று ஒருகாலத்தில் வதந்திகள் பரவிய நிலையில் தற்போது தடுப்பூசி போட்டுக் கொண்டவருக்கு கண் பார்வை திரும்ப கிடைத்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web