ஞாயிறு இரவு 10 மணிவரை மெட்ரோ ரயில் ஓடும்!!!

ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிவரை மெட்ரோ ட்ரெயின் ஓடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது
 
metro

சில நாட்களாகவே நம் இந்தியாவில் பெரும்பாலும் பல மாநிலங்களில் ஊரடங்கு என்ற பேச்சுவார்த்தையானது அதிகமாக நிலவியது. காரணம் என்னவெனில் இந்தியாவில் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவற்றை குணப்படுத்த ஊரடங்கு கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு மாநில அரசுகளும் முயற்சித்து வந்தனர். இதன் விளைவாக தற்போது இந்த நோய்க் கிருமியின் தாக்கம் படிப்படியாக குறைந்து நோய்க் கிருமியானது நம் கை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.metro

இதனால் பல மாநிலங்களில் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப் பட்டன இந்த சூழலில் தமிழகத்திலும் சில நாட்களாகவே போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் இந்த ஊருக்கு காலகட்டத்தில் மெட்ரோ ரயில் சேவையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட அனுப்புகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மெட்ரோ ரயில் பற்றி சில மக்களுக்குப் பிரயோசனம் அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி நாளை முதல் ஞாயிறு தோறும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது மேலும் அரசு பொது விடுமுறை நாட்களிலும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இரவு 9 மணி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை தற்போது ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு இரவு 10 மணி வரை இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From around the web