கூட்டம் முடிந்தது 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது!அனைத்துக்கட்சி முன்பு முதல்வர் பேச்சு!

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது!
 
கூட்டம் முடிந்தது 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது!அனைத்துக்கட்சி முன்பு முதல்வர் பேச்சு!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அறிவித்தபடி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. தமிழகத்தில் ஆளும் கட்சி அதிமுக கட்சி கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. அதிமுக கூட்டணியில் பாஜக கட்சி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.  அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி , மேலும் அவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் மீண்டும் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவை சேர்ந்த கனிமொழி பாஜகவை சேர்ந்த முருகன் போன்ற பல கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து இருந்தனர்.sterlite

மேலும் அவர்கள் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில தகவல்களையும் வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை நான்கு மாதம் ஆக்சிசன்  உற்பத்திக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் அவர் ஆக்சிசன் உற்பத்தி பிரிவுக்கு தொடர்புடைய பணியாளர்கள் மட்டுமே வளாகத்துக்குள் செல்ல அனுமதி என்றும் கூறினார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டதாக கூறப்படுகிறது. மேலும் திறப்பது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

மேலும் ஆக்சிசன் உற்பத்திக்கான மின்சாரத்தை தமிழக மின்சார வாரியம் வழங்கும் என்றும் கூறியுள்ளார். ஆக்சிசன்  உற்பத்திக்கான மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் மின் இணைப்பு ,தமிழ்நாடு மின் வாரியம் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் நிலைமையை கருத்தில் கொண்டு ஆக்சிஜன் 4 மாதங்களுக்குப் பிறகும் நீடிக்கலாம் என்று கூறினார்.

கண்காணிக்க ஆட்சியர் தலைவர் குழு அமைக்க தீர்மானம் எடுத்துள்ளதாக, கண்காணிப்பு குழுவில்மாவட்ட எஸ் பி, சார்-ஆட்சியர் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் இடம்பெறுவர் என்றும் கூறினார். மேலும் தமிழ்நாட்டின் தேவையை நிறைவேற்றப்பட்ட பிறகு அதிகப்படியாக உள்ள ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு வழங்கலாம் என்றும் கூறினார். தமிழ்நாட்டின் முதல் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

From around the web