தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 105.8 டிகிரி பாரன்ஹீட்!

தமிழகத்தில் கரூர் பரமத்தி பகுதியில் 105.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது!
 

தமிழகத்தில் கோடைகாலம் என்றாலே அனைவரும் நினைவு வருவது மே மாதம்தான். ஆனால் மே மாதம் தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தமிழகத்தின் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் ஆனது தலைவிரித்தாடுகிறது.தமிழகத்தில் அதிக பட்ச வெப்ப நிலையாக 105.8  டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

sun

இது கரூர் பரமத்தி பகுதியில் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து மதுரையில் 105.4 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து ஈரோட்டில் 104.36 டிகிரி ஃபாரன்கீட் பதிவாகியுள்ளது. திருச்சியில் 102.92 டிகிரி பாரன்ஹீட், சேலத்தில் 102.5 6 டிகிரி, கோவை, திருப்பத்தூரில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இது போன்ற தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர்.

மேலும் நாளைய தினம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து மக்களை மிகவும் எரிச்சலையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.மேலும் தமிழகத்தில் வெப்பநிலை மற்றும் உயரவில்லை ஆட்கொல்லி நோயான கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது மக்களை மிகவும் அச்சத்தில் ஏற்படுத்தியுள்ளது.

From around the web